திருக்கோவில் திருவிழாக்களும், விசேஷ பூஜைகளும்

தென்னிலந்தைத் திருத்தலமான திருகீழ்வேளூர் திருத்தலம் தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் தினந்தோறும் ஆறுகால பூஜைகளுடன் சிறப்பாக விளங்கி வருகிறது. உஷகாலம், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்ச, இரண்டாம் காலம், அர்த்தசாமம் எனும் ஆறுகால பூஜைகளும் அற்புதமாக நடந்து வருகிறது. ஆண்டு முழுவதும் அற்புத விழாக்களும், சிறப்பு பூஜைகளும் இத்தலத்தில் பாங்குற நடைபெற்று வருகின்றன.  11.09.2011 முதல் ஆலய வழிபாட்டிற்கு வரும் அன்பர்கள் பசியாற நண்பகல் 12.30 மணிக்கு அன்னதானம், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது.


இத்திருத்தலம் முற்பகலில் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிம், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிம் நடை திறந்து வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
பூசைகால விபரம்
பள்ளியறையிலிருந்து புறப்பாடுகாலை6.00 மணிக்குள்
காலசந்திகாலை8.00 - 9.30 மணிக்குள்
உச்சிகாலம்பகல்11.30 - 12.00 மணிக்குள்
சாயரட்சைமாலை5.30 - 7.00 மணிக்குள்
இரண்டாம் காலம்இரவு7.15 - 8.30 மணிக்குள்
அர்த்தசாமம்இரவு8.30 - 9.00 மணிக்குள்
தமிழ் மாதம் திதி/நட்சத்திரம் சிறப்பு வழிபாடு
சித்திரை மாத பிறப்பு மேஷவிஷீ புண்யகாலம் ஸ்ரீ தேவநாயகர் அபிஷேகம்
சித்திரை/பௌர்ணமி பிரமோற்சவம்
திருவோணம் ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்
சுக்ல பக்ஷ திருதியை (அக்ஷயத்திருதியை ) ஸ்ரீ அட்சயலிங்கசுவாமி சிறப்பு அபிஷேக ஆராதனை,ஸ்ரீ குபேர லெட்சுமி பூஜை
வைகாசி விசாகம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் சிறப்பு வழிபாடு
ஆனி மகம் ஸ்ரீ வலதுபாத நடராஜர் சிறப்பு அபிஷேகம்
உத்திரம் ஸ்ரீ நடராஜர் ஆனி திருமஞ்சன அபிஷேகம்
ஆடி மாதபிறப்புதட்சிணாயண புண்ய காலம் ஸ்ரீ தேவநாயகர் அபிஷேகம்
வெள்ளிகிழமைகள் ஸ்ரீ அம்பாள் சிறப்பு வழிபாடு உள் பிரகார புறப்பாடு
3-ஆம் வெள்ளிகிழமை திருவிளக்கு பூஜை
கடைசி வெள்ளி ஸ்ரீ சுந்தர குஜாம்பிகை மஞ்சள் காப்பு,ஸ்ரீ அஞ்சுவட்டதம்மன்-சர்க்கரை அன்னபாவாடை
பூரம் ஆடிபூர உற்சவம்,பூரம் கழித்தல் அம்பாள் திருவீதி உலா ஓடம்போக்கி ஆற்றில் தீர்த்தோற்சவம்
ஆவணி சுக்லபக்ஷ சதுர்த்தசி ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்
கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி வினாயகர் வீதிஉலா
மூலம் திருகல்யாண உற்சவம்
புரட்டாசி சுக்லபக்ஷ சதுர்த்தசி ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்
சுக்லபக்ஷ பிரதமை முதல் நவமி வரை நவராத்திரி-அம்பாள் உள் பிரகார புறப்பாடு
தசமி விஜயதசமி ஸ்ரீ பாலசுப்ரமணியர் அம்பு போடுதல் உற்சவம் திருவீதி உலா
ஐப்பசி மாதபிறப்பு துலா விஷீ புண்யகாலம் ஸ்ரீ தேவநாயகர் அபிஷேகம்
அஷ்வினி அன்னாபிஷேகம்
சுக்லபக்ஷ பிரதமை முதல் சஷ்டி வரை ஸ்ரீ பாலசுப்ரமணிய பெருமானுக்கு கந்தர் சஷ்டி விழா ,சூரசம்ஹாரம்
ஆண்டு முழுவதும் நடைபெறும் அற்புத விழாக்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் விபரம்
தமிழ் மாதம்திதி/நட்சத்திரம்சிறப்பு வழிபாடு
சித்திரைமாத பிறப்பு மேஷவிஷீ புண்யகாலம்ஸ்ரீ தேவநாயகர் அபிஷேகம்
சித்திரை/பௌர்ணமிபிரமோற்சவம்
திருவோணம்ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்
சுக்ல பக்ஷ திருதியை (அக்ஷயத்திருதியை )ஸ்ரீ அட்சயலிங்கசுவாமி சிறப்பு அபிஷேக ஆராதனை,ஸ்ரீ குபேர லெட்சுமி பூஜை
வைகாசிவிசாகம்ஸ்ரீ பாலசுப்ரமணியர் சிறப்பு வழிபாடு
ஆனிமகம்ஸ்ரீ வலதுபாத நடராஜர் சிறப்பு அபிஷேகம்
உத்திரம்ஸ்ரீ நடராஜர் ஆனி திருமஞ்சன அபிஷேகம்
ஆடிமாதபிறப்புதட்சிணாயண புண்ய காலம்ஸ்ரீ தேவநாயகர் அபிஷேகம்
வெள்ளிகிழமைகள்ஸ்ரீ அம்பாள் சிறப்பு வழிபாடு உள் பிரகார புறப்பாடு
3-ஆம் வெள்ளிகிழமைதிருவிளக்கு பூஜை
கடைசி வெள்ளிஸ்ரீ சுந்தர குஜாம்பிகை மஞ்சள் காப்பு,ஸ்ரீ அஞ்சுவட்டதம்மன்-சர்க்கரை அன்னபாவாடை
பூரம்ஆடிபூர உற்சவம்,பூரம் கழித்தல் அம்பாள் திருவீதி உலா ஓடம்போக்கி ஆற்றில் தீர்த்தோற்சவம்
ஆவணிசுக்லபக்ஷ சதுர்த்தசிஸ்ரீ நடராஜர் அபிஷேகம்
கிருஷ்ண பக்ஷ சதுர்த்திஸ்ரீ விநாயகர் சதுர்த்தி வினாயகர் வீதிஉலா
மூலம்திருகல்யாண உற்சவம்
புரட்டாசிசுக்லபக்ஷ சதுர்த்தசிஸ்ரீ நடராஜர் அபிஷேகம்
சுக்லபக்ஷ பிரதமை முதல் நவமி வரைநவராத்திரி-அம்பாள் உள் பிரகார புறப்பாடு
தசமிவிஜயதசமி ஸ்ரீ பாலசுப்ரமணியர் அம்பு போடுதல் உற்சவம் திருவீதி உலா
ஐப்பசிமாதபிறப்பு துலா விஷீ புண்யகாலம்ஸ்ரீ தேவநாயகர் அபிஷேகம்
அஷ்வினிஅன்னாபிஷேகம்
சுக்லபக்ஷ பிரதமை முதல் சஷ்டி வரைஸ்ரீ பாலசுப்ரமணிய பெருமானுக்கு கந்தர் சஷ்டி விழா ,சூரசம்ஹாரம்
கார்த்கிகைகார்த்திகைதிருக்கார்த்திகை - சொக்கப்பனை ஏற்றுதல் திருவீதியுலா
திங்கட்கிழமைகள்சோமவாரம் 108 சங்காபிசேகம்
மார்கழிமாதம் முழுவதும் திருபல்லிஎழுச்சி வழிபாடு அதிகாலையில்
வியதீபாதம்ஸ்ரீ அட்சயலிங்கசுவாமிக்கு அபிஷேகம், ஸ்ரீ கல்யாண சுந்தரர் சிறப்பு அபிஷேக ஆராதனை
அமாவாசைஸ்ரீ தேவநாயகர் அபிஷேகம் இந்திரன் சாப விமோசனம், இந்திர தீர்த்தத்தில் தீர்த்தோற்சபம்
திருவீதியுலா இரவு நிறைபணி காட்சி கொடுத்தார் அபிஷேகம்
அமாவாசை (அனுமத் ஜெயந்தி)அனுமத் ஜெயந்தி ஸ்ரீ சிவ ஆஞ்சநேயர் அபிஷேக ஆராதனை
தைதிருவாதிரை ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் ஆருத்ரா தரிசனம் திருவீதியுலா
மாதப்பிறப்பு உத்தராயண புண்ய காலம் ஸ்ரீ தேவநாயகர் அபிஷேகம்
பூசம்ஸ்ரீ கல்யாணசுந்தரர் அபிஷேகம் திருவீதியுலா
வெள்ளிகிழமைகள் ஸ்ரீ அம்பாள் உள்பிரகார புறப்பாடு
3-ம் வெள்ளிகிழமை திருவிளக்கு பூஜை
கடை வெள்ளி ஸ்ரீ சுந்தரகுஜாம்பாள் - மஞ்சள் காப்பு ஸ்ரீ அஞ்சுவட்டதம்மன் சர்க்கரை அன்னப்பாவாடை
மாசி சுக்லபக்ஷ சதுர்த்திஸ்ரீ நடராஜர் அபிஷேகம்
கிருஷ்ணபக்ஷ சதுர்த்திமகா சிவராத்திரி
மகம்மாசிமக தீர்த்தவாரி கல்யாணசுந்தரர் வீதியுலா
பங்குனி கடைசிவாரம் ஸ்ரீ அஞ்சுவட்டத்தம்மன் தேர்த்திருவிழா
12 மாதங்கள் கிருத்திகை ஸ்ரீ பாலசுப்ரமணியர் வெளிப்பிரகார புறப்பாடு
ஆறுமுகசுவாமி அபிஷேக ஆராதனை
அமாவாசை குபேர லெட்சுமி ஹோமம் - பூஜை
பௌர்ணமிஅஞ்சுவட்டத்தம்மன் சிறப்பு ஆராதனை
பிரதோஷம் பிரதோஷ வழிபாடு
அஷ்டமிஸ்ரீ பைரவர் வழிபாடு
அந்தந்த திரு நட்சத்திரங்கள் ஸ்ரீ நாயன்மார்கள் வழிபாடு
ஸ்ரீ குருபெயர்ச்சி, சனிபெயர்ச்சி, இராகு-கேது பெயர்ச்சி உள்ளிட்டவை சிறப்பு ஹோமங்களுடன் நடைபெற்று வருகிறது.
தினசரி சிறப்பு திட்டங்கள்

நித்திய கட்டளைத் திட்டம்

இத்திருக்கோயிலில் தினசரி பூஜைக்கு ஒவ்வொரு நாளும் ரூ.750/- வரை செலவிடப்படுகிறது. இதற்கான நித்திய கட்டளைத் திட்டம் இத்திருத்தலத்தில் செயல்படுத்தப்படுகிறது. சிவநேயச் செல்வர்கள் இத்திட்டத்தில் பங்குபெற ரூ.7500/- (ரூபாய் ஏழாயிரத்து ஐநூறு மட்டும்) அனுப்பினால் அந்த தொகை வங்கியில் நிரந்தர வைப்பில் வைக்கப்பட்டு, ஆண்டுக்கொருமுறை கட்டளைதாரர் குறிப்பிடும் நாளில் அவர்கள் பெயரில் பூஜை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

தீபக் கட்டளைத் திட்டம்

அருள்மிகு அட்சயலிங்கசுவாமி ஆலயத்தின் சன்னதிகளில் நெய்தீபம் ஏற்ற நாளொன்றுக்கு ரூ.100 செலவிடப்படுகிறது. தீபம் ஏற்றி, தீவினைகள் அகன்று நல்வாழ்வு பெற இந்த தீபக் கட்டளைத் திட்டத்தில் பங்கு பெற விரும்பும் அன்பர்கள் ரூபாய் அனுப்பினால் அந்தத் தொகை வங்கியில் நிரந்தரவைப்பில் வைக்கப்பட்டு ஆண்டுக்கொரு முறை கட்டளைதாரர் குறிப்பிடும் நாளில் ஆலயத்தில் தீபம் ஏற்றும் கைங்கர்யம் அவர்களது பெயரில் நடைபெறும்.

அன்னதானத் திட்டம்

இத்திருக்கோயிலில் 11.9.2011 முதல் தினசரி அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆலய வழிபாட்டிற்கு வரும் அன்பர்களுக்கு நாளொன்றுக்கு 50 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பங்குபெற விரும்பும் அன்பர்கள் ரூ.1250/-(ரூபாய் ஆயிரத்தி இருநூற்றைம்பது மட்டும்) செலுத்தினால் அவர்கள் குறிப்பிடும் நாளில் அன்னதானம் வழங்கப்படும்.

அர்ச்சனை கட்டளைத் திட்டம்

இத்திருக்கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ குபேரனுக்கு அர்ச்சனை செய்து குபேர சம்பத்துக்கள் பெறவும், வேண்டுவோர்க்கு வேண்டுவன நல்கும் அன்னை அஞ்சுவட்டத்தம்மனுக்கு அர்ச்சனை செய்து அருள் பெறவும் விரும்பும் அன்பர்கள் ரூ.50/-க்கு பணவிடை (மணியார்டர்) (அர்ச்சனை ஒன்றுக்கு) அனுப்பினால் அவர்கள் பெயரில் அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.