Monthly Archives

August 2018

ஆடி அலங்காரம்

கீழ்வேளூர் அருள்மிகு அட்சயலிங்க சுவாமித் திருக்கோவில் அருள்மிகு சுந்தரகுஜாம்பிகைக்கு ஆடி கடை வெள்ளியை முன்னிட்டு மஞ்சள் காப்பு அலங்காரம் மற்றும்  ஆடிப் பூரத்தை முன்னிட்டு வளையல் அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.

அருள்மிகு அஞ்சுவட்டதம்மன் 7-ம் ஆண்டு ஏகதின இலட்ச்சார்ச்சனை விழா அழைப்பிதழ்

அன்புடையீர் வணக்கம்,

கங்கையின் புனிதமாகிய காவிரி என்ற சிறப்புமிக்க பொன்னி நதியின் ஓடம்போக்கி ஆற்றின் தென்கரையில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டுத் திருத்தலங்களுக்குள் ஒன்றாகவும், கேடிலியை நாடுமவர்க்கு கேடில்லை என்ற அப்பர் திருவாக்கிற்கிணங்க நம் கேடுகளை அகற்றும் கேடிலியப்பராக இறைவன் அருள்பாலிக்கும் திருக்கீழ்வேளூர் திருத்தலத்தின் ஈசான்ய பாகத்தில் வடதிசை நோக்கி அமர்ந்து நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐய்ம்பூதங்களிலும் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, ஆகாயம் ஆகிய ஐந்திசைகளிலும் பரவி நின்று அன்று தன் மைந்தனாம் குமரனின் தவம் காத்து, அவரது வீரகத்தி எனும் பாவம் விலகச் செய்த, பத்ரகாளி திருவுருவங் கொண்ட அன்னை, நம் பாவங்களைப் போக்கி வேண்டுவோர்க்கு வேண்டுவன அருளும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகத் திகழும் அருள்மிகு அஞ்சுவட்டத்தம்மனுக்கு, நாளது ஸ்ரீ விளம்பி வருடம் ஆவணி மாதம் 3-ம் நாள் (19-09-2018) ஞாயிற்றுகிழமை ஏகதின இலட்ச்சார்ச்சனை விழா நிகழ்ச்சி நிரலில் கண்டவண்ணம் சிறப்புற நிகழவிருப்பதால் மெய்யன்பர்களும், பக்தகோடிகளும் இதில் பங்கேற்று அன்னையின் அருளைப்பெற்று வாழ்வாங்கு வாழ அன்புடன் அழைக்கின்றோம்.

தேதி / கிழமைநேரம்நிகழ்ச்சி நிரல்உபயம்
விளம்பி வருடம் 19-08-2018 ஞாயிறு ஆவணி - 3காலை 6-00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ஹோமம்.சிவ கைங்கர்ய அறக்கட்டளை கீழ்வேளூர்.

அருள்மிகு ஸ்ரீ அஞ்சுவட்டத்தம்மன் கைங்கர்ய சபா, கீழ்வேளூர்.
காலை 7-30 மணிக்குபூர்ணாஹுதி
காலை 8-00 மணிக்குமஹா அபிஷேகம், மஹா தீபாராதனை
காலை 9-00 மணிக்குஇலட்ச்சார்ச்சனை ஆரம்பம்
இரவு 8-30 மணிக்குஇலட்ச்சார்ச்சனை பூர்த்தி திருவருட் பிரசாதம் வழங்குதல்
அழைப்பிதழை காண கிளிக் செய்யவும்