Category

Invitation

அருள்மிகு அஞ்சுவட்டதம்மன் 7-ம் ஆண்டு ஏகதின இலட்ச்சார்ச்சனை விழா அழைப்பிதழ்

அன்புடையீர் வணக்கம்,

கங்கையின் புனிதமாகிய காவிரி என்ற சிறப்புமிக்க பொன்னி நதியின் ஓடம்போக்கி ஆற்றின் தென்கரையில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டுத் திருத்தலங்களுக்குள் ஒன்றாகவும், கேடிலியை நாடுமவர்க்கு கேடில்லை என்ற அப்பர் திருவாக்கிற்கிணங்க நம் கேடுகளை அகற்றும் கேடிலியப்பராக இறைவன் அருள்பாலிக்கும் திருக்கீழ்வேளூர் திருத்தலத்தின் ஈசான்ய பாகத்தில் வடதிசை நோக்கி அமர்ந்து நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐய்ம்பூதங்களிலும் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, ஆகாயம் ஆகிய ஐந்திசைகளிலும் பரவி நின்று அன்று தன் மைந்தனாம் குமரனின் தவம் காத்து, அவரது வீரகத்தி எனும் பாவம் விலகச் செய்த, பத்ரகாளி திருவுருவங் கொண்ட அன்னை, நம் பாவங்களைப் போக்கி வேண்டுவோர்க்கு வேண்டுவன அருளும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகத் திகழும் அருள்மிகு அஞ்சுவட்டத்தம்மனுக்கு, நாளது ஸ்ரீ விளம்பி வருடம் ஆவணி மாதம் 3-ம் நாள் (19-09-2018) ஞாயிற்றுகிழமை ஏகதின இலட்ச்சார்ச்சனை விழா நிகழ்ச்சி நிரலில் கண்டவண்ணம் சிறப்புற நிகழவிருப்பதால் மெய்யன்பர்களும், பக்தகோடிகளும் இதில் பங்கேற்று அன்னையின் அருளைப்பெற்று வாழ்வாங்கு வாழ அன்புடன் அழைக்கின்றோம்.

தேதி / கிழமைநேரம்நிகழ்ச்சி நிரல்உபயம்
விளம்பி வருடம் 19-08-2018 ஞாயிறு ஆவணி - 3காலை 6-00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ஹோமம்.சிவ கைங்கர்ய அறக்கட்டளை கீழ்வேளூர்.

அருள்மிகு ஸ்ரீ அஞ்சுவட்டத்தம்மன் கைங்கர்ய சபா, கீழ்வேளூர்.
காலை 7-30 மணிக்குபூர்ணாஹுதி
காலை 8-00 மணிக்குமஹா அபிஷேகம், மஹா தீபாராதனை
காலை 9-00 மணிக்குஇலட்ச்சார்ச்சனை ஆரம்பம்
இரவு 8-30 மணிக்குஇலட்ச்சார்ச்சனை பூர்த்தி திருவருட் பிரசாதம் வழங்குதல்
அழைப்பிதழை காண கிளிக் செய்யவும்

பங்குனி பெருந்திருவிழா

அன்புடையீர்,
பொன்னிவளந்தரும் சோழவள நாட்டின்கண் தமிழகத்தில் தொன்மைவாய்ந்த திருக்கோயில்களுள்  ஒன்றானதும் சமயகுரவர்கள் மூவரால் பாடப்பெற்றதும் அருள்மிகு முருகப்பெருமான் தனது வீரஹத்தி (கொலைபாவ தோஷம் நீங்க தவமிருந்து பூஜை செய்த பெருமைவாய்ந்ததுமான கீழ்வேளூர் அருள்மிகு அட்சயலிங்க சுவாமி திருக்கோயிலில், அருள்மிகு முருகப்பெருமானின் தவத்தைக் காக்க காளி அவதாரம் கொண்டு நான்கு திசைகள் மற்றும் ஆகாயம் என ஐந்து திசைகளிலும் வட்டத்திலும் இடையூரின்றி காத்து அருள்பாலிக்கும் பராசத்தி அன்னை அஞ்சுவட்டத்தம்பாளுக்கு (பஞ்சதசாம்பிகை) நிகழும் ஹேவிளம்பி வருடம் பங்குனி மாதம் 20 ஆம் நாள் (03.04.2018) முதல் பங்குனி 30 -ஆம் நாள் (13.04.2018) வரை கீழ்கண்ட நிகழ்ச்சிகளின் விவரப்படி பங்குனிப் பெருந்திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெறவிருப்பதால் அன்பர்கள் அனைவரும் திருவிழாவிற்கு வருகை தந்து அஞ்சுவட்டத்தம்பாளின் திருவருளைப் பெற்றுய்ய வேண்டுகிறோம்.

அழைப்பிதழை காண கிளிக் செய்யவும்
நிகழ்ச்சிஉபயதாரர்
நாள்: பங்குனி 18 (01.04.2018)
கிழமை: ஞாயிற்றுக்கிழமை
மாலை: அருள்மிகு வல்லாங்குளத்து முத்து மாரியம்மன் உற்சவம்
கிராம சமுதாயம்
நாள்: பங்குனி 19 (02.04.2018
கிழமை: திங்கட்கிழமை
மாலை: அருள்மிகு அழகிய மணவாள ஐயனார் உற்சவம்
திருக்கோயில் நிர்வாகம்
நாள்: பங்குனி 20 (03.04.2018)
கிழமை: செவ்வாய்க்கிழமை
மாலை: 4.00 மணி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை,
வாஸ்து சாந்தி
இரவு: 7.00 மணி முதல் 9.00 மணி வரை துலா லக்னத்தில் - ரக்ஷா பந்தனம் (காப்பு கட்டுதல்)
திரு. D. ஜெகநாத உடையார்,
ரைஸ்மில், கீழ்வேளூர்
நாள்: பங்குனி 21(04.04.2018)
கிழமை: புதன்கிழமை
இரவு: அன்னப்பட்சி வாகனத்தில் அருள்மிகு அஞ்சுவட்டத்தம்மன் வீதியுலா
திரு. R.A. ரெங்கராஜ்,
ஸ்ரீ ரெங்கா ஹோட்டல் - ஸ்வீட்ஸ் & பேக்கரி,
கீழ்வேளூர்.
நாள்: பங்குனி 22 (05.04.2018)
கிழமை: வியாழக்கிழமை
இரவு: மஞ்சத்தில் அருள்மிகு அஞ்சுவட்டத்தம்மன் வீதியுலா
ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள்,
கீழ்வேளூர்.
நாள்: பங்குனி 23 (06.04.2018)
கிழமை: வெள்ளிக்கிழமை
இரவு: சிம்ம வாகனத்தில் அருள்மிகு அஞ்சுவட்டத்தம்மன் வீதியுலா

கலைநிகழ்ச்சி: அருள்மிகு அஞ்சுவட்டத்தம்மன் மகளிர் உயர்நிலைப்பள்ளி
மாணவிகள் வழங்கும் நிகழ்ச்சி
அருள்மிகு அஞ்சுவட்டத்தம்மன் மகளிர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியைகள், பணியாளர்கள், கீழ்வேளூர்.
நாள்: பங்குனி 24 (07.04.2018)
கிழமை: சனிக்கிழமை
இரவு: மஞ்சத்தில் அருள்மிகு அஞ்சுவட்டத்தம்மன் வீதியுலா
திரு. ரெ. கோவிந்தராஜன்,
திருமதி. பிரேமலதா, திருவாரூர்.
திரு. கோ.ஜெயக்குமார்,
மடப்புரம், திருவாரூர்.
நாள்: பங்குனி 25 (08.04.2018)
கிழமை: ஞாயிற்றுக்கிழமை
இரவு: யானை வாகனத்தில் அருள்மிகு அஞ்சுவட்டத்தம்மன் வீதியுலா
திரு. V. குமரன், பொறியாளர்.
தெற்கு ரயில்வே செங்கல்பட்டு.
நாள்: பங்குனி 26 (09.04.2018
கிழமை: திங்கட்கிழமை
இரவு: வெள்ளி ரிஷப வாகனத்தில் அருள்மிகு அஞ்சுவட்டத்தம்மன் வீதியுலா

அகரக்கடம்பனூர் முன்னாள் கர்ணம்.
திரு. V.R. சீனிவாச அய்யர் - அமிர்தவல்லி அம்மாள்,
நினைவு அறக்கட்டளை சார்பாக
குமாரர்கள்
திரு. S. சந்தான கிருஷ்ணன்,
திரு. S.குமார்
திரு. S. சந்திர சேகர்
குமாரத்திகள்
திருமதி. சந்திரா கிருஷ்ணமூர்த்தி,
திருமதி. பிரபா முரளிதாஸ்
இரவு: கலைமாமணி. N.G.கணேசன், N.G.G. பாலு குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நடைபெறும்.
நாள்: பங்குனி 27(10.04.2018)
கிழமை: செவ்வாய்க்கிழமை
இரவு: 10.00 மணிக்கு மேல் 11.00 க்குள் தனுர் லக்னத்தில் அருள்மிகு அஞ்சுவட்டத்தம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல்
கீழ்வேளூர் அக்ரஹாரத்தார் மற்றும்
திரு. K. லெட்சுமணன் நிம்மி,
திரு. சுந்தரேசன்
திரு. K. ஜெகன், மோகன்,
திரு. S. சுவாமிநாதன், சென்னை.
திரு. சீனிவாசன் & பிரதர்ஸ், சென்னை.

இரவு வானவேடிக்கை உபயம்
திரு. பொன். ஆசைத்தம்பி வெடிக்கடை, நீலப்பாடி
இரவு: 6.00 மணியளவில் தேவார இன்னிசை
நாள்: பங்குனி 28 (11.04.2018)
கிழமை: புதன்கிழமை
காலை: 7.00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல்

அருள்மிகு அஞ்சுவட்டத்தம்மன் திருத்தேரோட்டம்
திருக்கோயில் நிர்வாகம்
நாள்: பங்குனி -28 (11.04.2018)
கிழமை: புதன்கிழமை
இரவு: 9.00 மணி திருத்தேரிலிருந்து அருள்மிகு அஞ்சுவட்டத்தம்மன் திருக்கோயிலுக்கு எழுந்தருளல், சுத்தாபிஷேகம்.
திரு. Er. R. தினேஷ்பாபு விஜயலெட்சுமி,
புதுநகர், கச்சனம் சாலை, கீழ்வேளூர்
இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.
நாள்: பங்குனி 30 (13.04.2018)
கிழமை: வெள்ளிக்கிழமை
இரவு: 7.00 மணிக்கு விடையாற்றி, ஊஞ்சல் அருள்மிகு அஞ்சுவட்டத்தம்மன் உள் பிரஹாரம் புறப்பாடு.
திரு. தா. மாணிக்கவேலு ஆசாரி & சன்ஸ்,
திரு. மா.மதன்குமார், திரு. மா.மாதேஷ்குமார்
திரு. தி.இராமன், திரு. தி.லெட்சுமணன்,
கீழவீதி, கீழ்வேளூர்.