Category

Occasion

திருக்கல்யாணம்

இன்று (19-06-2018)கீழ்வேளூர் அருள்மிகு அட்சயலிங்க சுவாமி அருள்மிகு சுந்தரகுஜாம்பிகை திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.

அட்சய திருதியை

இன்று (18-04-2018) அட்சய திருதியை-யை முன்னிட்டு அருள்மிகு அட்சயலிங்க சுவாமி மற்றும் அருள்மிகு குபேரர் -க்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ரிஷப வாகனம்

கீழ்வேளூர் அருள்மிகு அட்சயலிங்க சுவாமித் திருக்கோவிலில் அருள்பாலிக்கும் அருள்மிகு அஞ்சுவட்டத்தம்மனுக்கு பங்குனித் திருவிழா ஆறாவது நாள் (09-04-2018) ரிஷப வாகனம்.

மஞ்சம்

கீழ்வேளூர் அருள்மிகு அட்சயலிங்க சுவாமித் திருக்கோவிலில் அருள்பாலிக்கும் அருள்மிகு அஞ்சுவட்டத்தம்மனுக்கு பங்குனித் திருவிழா நான்காவது நாள் (07-04-2018 மஞ்சம்.

சிம்ம வாகனம்

கீழ்வேளூர் அருள்மிகு அட்சயலிங்க சுவாமித் திருக்கோவிலில் அருள்பாலிக்கும் அருள்மிகு அஞ்சுவட்டத்தம்மனுக்கு பங்குனித் திருவிழா மூன்றாவது நாள் (06-04-2018) சிம்ம வாகனம்.

மஞ்சம்

கீழ்வேளூர் அருள்மிகு அட்சயலிங்க சுவாமித் திருக்கோவிலில் அருள்பாலிக்கும் அருள்மிகு அஞ்சுவட்டத்தம்மனுக்கு பங்குனித் திருவிழா இரண்டாம் நாள் (05-04-2018) மஞ்சம்.

அன்ன வாகனம்

கீழ்வேளூர் அருள்மிகு அட்சயலிங்க சுவாமித் திருக்கோவிலில் அருள்பாலிக்கும் அருள்மிகு அஞ்சுவட்டத்தம்மனுக்கு பங்குனித் திருவிழா முதல் நாள் (04-04-2018) அன்ன வாகனம்.

தை பிரதோஷம்

பல ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் பிரதோஷம் (29-1-2018, தை 16), சிவ ரகசியம் என்னும் நூலில் (சமஸ்கிருதத்தில் இருந்து ஒரு பகுதி தமிழாக்கம் செய்யப்பட்டது) சிவலிங்க பூசை எனும் தலைப்பில் பழங்காலத்தில் திங்கட்கிழமை திரயோதசி திதி மற்றும் திருவாதிரை நட்சத்திரம் கூடிய நாளில் ஸ்ரீசைலம் என்ற தலத்தில் வாழ்ந்து வந்த கொடிய பாவங்களை செய்து வந்த வறிய அந்தணன் வழிபாடு இல்லாத கோயிலில் தன்னை அறியாமல் செய்த செயல் சிவபெருமானால் சிவ பூசையாக ஏற்கப்பட்டு ரத்ன மாளிகை, பசுக்கள், குதிரைகள் மற்றும் பல வாழ்விற்கு தேவையானவற்றையும் பெற்றான்,
அத்தகைய நாள் பல ஆண்டுக்கு ஒரு முறை மடடுமே வரும் (திங்கட்கிழமை, திரயோதசி திதி, திருவாதிரை நட்சத்திரம் கூடிய நாள்) வரும் 29-1-2018 தை மாதம் 16 ம் நாள் வருகிறது.
அன்றைய தினம் நாம் அனைவரும் வீட்டில் இருந்தாலும் அலுவலக்தில் இருந்தாலும் அருகில் உள்ள சிவாலயம் சென்று பிரதோஷ விழாவில் இறைவனை வழிபட்டு வாழ்விற்கு தேவையான நலங்கள் பெற்று உய்வோம்.